ஏதேதோ எண்ணங்கள் வந்து அலைபாய்வதே மனதின் அனிச்சை செயலாக திகழ்கின்றது.எண்ணங்களும் எண்ணத்தின் ஓட்டங்களும் கட்டுக்கடங்குவது ஏனோ ஒரு பெரிய சவாலாகவே அமைந்துவிடுகின்றது. காலத்துக்கும் அதன் கணக்கிற்கும் என்றுமே தனி ஒரு மனிதனால் முடிவு கட்ட இயலுவதில்லை, காரணம் முயற்சி செய்ய சிலர் முயல்வதுமில்லை, முயன்றும் தோற்பதால் மீண்டும் முயற்சிக்க மனம் வருவதுமில்லை.
எண்ணங்களின் பிதற்றல்களில் வாழ்க்கையில் பலருக்கு கிழிசல்கள் விழுகின்றன. எண்ண ஓட்டங்கள் மனிதனின் மன நிலையை மட்டுமின்றி, முழு மனிதனின் வாழ்க்கைக்கான ஆழத்தையே ஆட்டி படைத்துத்தான் பார்த்துவிடுகின்றது. மன குழப்பங்கள் மன அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி அதோடு மட்டுமின்றி இல்வாழ்வையே சீர்கெடுத்து விட காரணியாகவே மாறிவிடுகின்றது.
எத்தனை எத்தனை அர்த்தங்கள் அதிலும் எண்ணிலடங்கா புரிதல்கள், காலத்தின் கட்டாயமாக சில சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் மனிதர்களின் கட்டளையாகவே பல நிகழ்வுகளும் அரங்கேறத்தான் செய்கின்றன. தெரியாமல் அடைகின்ற வேதனைகள் தெரிந்தே கிடைக்கும் சோதனைகளால் கிடைக்கும் பரிசுப்பொருளாக. வேதனைகளின் விடையாக வித்தியாசமான விளைச்சலாக பரிதவிக்கும் பங்காளிகளாக மனம் தினம் நொந்து வெம்பி விடுகின்றது இவற்றில் சிக்கி திணறல் தாங்காமல். யாருக்கு தெரியும் ஒருவரின் மனதில் இதுதான் இருக்கின்றது என, வாய்ப்புகள் கிடைத்தாலும் வலி பெரிதாக தெரிகின்றதாலோ என்னவோ மீள முடியவில்லை. வைப்புகளுக்கே சில இடங்களில் வாய்ப்பளிக்கவும் முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கேட்பதில்லை மனம், மாறாக அமைதியான அழகான, அளவான வாழ்க்கை வாழ தானே ஆசை படுகின்றது. அதற்கும் தான் எதனை சோதனைகள், எத்தனை அவமானங்கள். துன்பங்களும் துயரங்களும் தோளில் தொய்வை ஏற்படுத்துவதில் சற்றும் மனிதாபிமானம் காட்டுவதில்லை.
சோகங்கள் நெஞ்சில் கீறலையும் கிழிசல்களையும் தந்த போதிலும், துயரங்கள் என்னால் உன்னை தீண்டிவிடுமோ என்ற அச்சத்தில் மந்தகாசம் சிந்தி செல்கிறேன், யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும் என.
எண்ணிக்கை என்றும் வாழ்க்கைய முடிவுபன்றது இல்லை ...எண்ணம்தான் முடிவு பண்ணும்..."" எண்ணம் போல் வாழ்க்கை" வயது வாழ்க்கைய முடிவு பண்ணது நம் எண்ணம்தான் முடிவு பண்ணும்...
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி
Delete