கலகலப்பான கயமையற்ற கண்ணோட்டம், வாழ்க்கையில் வந்தோர், சென்றோர் என எத்தனை எத்தனை பேருண்டு , அத்தனை அத்தனை மனிதர்களும் பார்த்ததும் உண்டு, உன்னை தாண்டிச் சென்றவர்களை விறல் கொண்டு எண்ணிவிடலாம். மனமும் குணமும் ஒரு நிமிடத்தில் நிலை தடுமாறும் எனில் அங்கே மனச்சிதறல் வந்து அரங்கேறிவிட்டது என்றே அர்த்தமாகிறது. காதலில் ஒருபுறம் மனம் தடுமாற, வாழ்க்கையில் ஒரு முறை நிலை தடுமாற, கண்டதிலும், கேட்டதிலும் சில நேரங்களில் இருக்கவே. காணாததிலும் சில நேரங்களில் லயித்து தான் போகின்றது இந்த மனம்.
மனமோ குரங்கென்பர், குணம் பற்றி கவலையில்லாதவராக, களமும் நேரமும் ஒருவரை எப்படியும் மாற்றி சிந்திக்க வைத்துவிடும். காட்சிப்பிழைகள் கண்களுக்கே உரிய சொந்தக்காரர்களாக வலம் வருகின்ற தருணத்தில்.பாய்வதும் பாயவிடுவதும் மனதின் செயல் மட்டும் என மனதின் மேல் முழு குற்றத்தையும் சுமத்திவிட முடியாது ஏனென்றால், எண்ணமும் கண்ணோட்டமும் ஒன்றே இணக்கமாக இணங்கும் பட்சத்தில் மனமும் அதற்கு ஆசையை வளர்க்கும் விதமாக ஒரு வித தூண்டலை மட்டுமே முழுமையாக பலமாக கொடுத்து கொண்டே இருப்பதால் தான் மனம் எதை கண்டு வியக்கிறது, எதனை நோக்கி பயணிக்கிறது, எதை தனக்கென்று ஆக்கிக்கொள்ள துடிக்கின்றதோ, தேடி தேர்ந்தெடுக்கின்றதோ அதையே ஆத்மாத்மமாக அடைய மனம் உந்தசெய்து விடுகிறது. அலைபாய்வது தவறொன்றுமில்லை பாதை தவறாமல் போகும் பட்சத்தில். ஆனால் அதற்கு அத்தனை பெரிய பக்குவமும் இருந்தாக வேண்டி இருக்கின்றது. சற்றே கடினம் தான் மனதை கட்டுப்படுத்துவது என்பது அசாத்தியமான ஒன்றாக தான் இருக்கும் ஆனாலும் ஆழ்ந்து சிந்தித்து புரிதலில் வேரூன்றிவிட்டால் மனதை ஒருமுகப்படுத்தி வாழ்வை நிலையாக பெற்றுக்கொள்ளலாம்.
மனம் மனம் தான்.
குணம் குணம் தான்.
பகுத்து அறிவதும், பகுத்ததில் புரிவதுமே சாலச் சிறந்தது.
உலகம் ஒன்றுதான். ஆனால், அதே உலகம் ஒருவருக்கு நரகமாகவும், மற்றவர்களுக்கு சொர்க்கமாகவும் தெரிகிறது.மனம் மாறினால் குணம் மாறலாம்!
ReplyDeleteஅருமை.
Deleteகருத்திற்கு நன்றி