சிலநேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக பலநேரங்களில் பங்காளிகளாக ஓரிடத்தில் விளையாட்டாய் வேறிடத்தில் விபரீதமாய் ...குழந்தையிடத்தில் கூறும்போது அன்பிற்காகவும், உற்றோரிடத்தில் உரைக்கையில் ஆறுதலுக்காகவும், இடங்களுக்கு ஏற்ப ஏற்றத்திற்காகவும், இரக்கத்திற்காகவுமாக, கண் துடிப்பாக சில தருணங்கள், கட்டவிழ்ப்பாகவும் சில தருணம், காண்பவர்கள் கண்வசமாகவும், காட்சிப்பிழை கலங்களாகவும் பல்வேறு பயன்பாடாகவும் பயன்பாட்டாளரின் அறிவுத்திறனையும் பயனாளிகளின் ஏமாற்றுத்தன்மையையும் பொறுத்து மாறுபடுகின்றது.
கடமையில் பொய் கண்துடைப்பிற்கு, கல்வியில் பொய் கட்டணங்கள் அணிவகுப்பிற்கு, சிகிச்சையில் பொய் முதலீடு ஈட்டுவதற்கு, எங்கும் பொய்யின் பெயர் பேர்பெற்றதாக கர்வமாக அணிவகுக்கப்படுகின்றது. கடைக்கோடி மக்களானாலும் கடந்துவந்த பாதையில் இவரது பங்கிற்கோ பிறர் பங்கில் இவரோ அனுபவித்த ஒன்றாக இந்த பொய் இருக்கத்தான் செய்கிறது. ஏனோ அதனிடத்தில் அனைவருக்கும் இவ்வளவு அளவுகடந்த அக்கறையும் அபிமானமும் ஆர்பரித்துக்கொண்டு காணப்படுகின்றது. அளவுக்குமீறி பற்று அதன்பேரில் இருப்பதாலோ என்னவோ கர்வத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது தலைக்கனத்துடன்.
செய்த செயலில் திருப்திமிக்க பார்ப்பவர்கள் கைகளை கொண்டு விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலும், அதிருப்தி அளிக்கும் பட்சத்தில் பார்பவர்கள் எண்ணிக்கையில் ஏராளமாகவும் ஆகிவிட்டனர்.
No comments:
Post a Comment