Friday, 14 September 2018

என் பாதை நீ

காலம் கடக்க
தூரம் நடக்க
கைகள் கோர்க்க
கண்கள் நோக்க
பின்பும் நீ
என்
முன்பும் நீயே
நிற்க...
எதிலும் நீயாக
எங்கேயும் நீயாக
ஏங்குமிடத்தில் தாயாக
தாங்குமிடத்தில் தந்தையாக
தந்தாய் உன்னை
வென்றாய் என்னை!

உன் காதலால்
தந்தேன் என்னை!

தோழனாய் நின்றாய்
தோல் கொடுத்தாய்
நாளும் பொழுதும்
என் அருகில்
நீ இருக்க
என்ன தவம்
நான் புரிய...

கண்களில் நீ
எண்ணங்களிலும் நீ
கண்ணீர் கண்டால் துடிக்கிறாய்
தாலாட்டு தந்து தட்டிக்கொடுக்கிறாய்...

என் வாழ்வில் கிடைத்த வரமாய் நீ...
என்னை வாழ வைக்கும் வழியாய் நீ...

என் பதமும் நீயாக
முப்பொழுதும் நாமாக
சேர்வோமே !
தொடர்வோமே !

நம் பயணத்தை...
ஒன்றாக கை கோர்த்து...

என் பாதை நீ.


No comments:

Post a Comment

I Never Let Me Go...

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈...