Saturday, 26 May 2018

காலை உற்சாகமாக துவங்க வழிகள்

வாசகர்களே! நம்மில் பலருக்கு  காலையில் எழுவது  மிக கடினமான ஒரு விஷயமாக உள்ளது.  குறைந்தது 2 முறையாவது கடிகாரத்தில் உள்ள  snooze பொத்தானை அழுத்தாமல் எழுவது அரிது.

இதற்க்கு சில வழிகள் உள்ளன. அதை நாம் பின்பற்றினால் நமது காலை பொழுது நமதாக அமைவதோடு நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும்.

1. போதுமான அளவு தூக்கம்
        இப்பொழுது கைபேசி நமது தூக்கத்தை திருடிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நாம் தூக்கம் மறந்து  இரவு நேரத்தை கைபேசி மற்றும் இன்டர்நெட் உடன் கழிக்கிறோம்.
         நீங்கள் இரவில் ஒரு நேரத்தை பொருத்தி விடுங்கள். தினமும் அந்த நேரத்தை உங்களது தூங்குவதற்கான நேரமாக வைத்துக்கொள்ளுங்கள். நமது உடல் மற்றும் மனதிற்கு குறைந்தளவு 8 மணி நேர உறக்கம் அவசியம்.இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட ஒன்றாகும்.

 நீங்கள் தினசரி வாழ்வில் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் சீக்கிரம் உறங்க சென்று குறைந்தது 7 முதல் 8 மணி  நேரம் உறங்குங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் இன்னும் சக்திவாய்ந்தவராக மற்றும் நாளை எதிர்கொள்பவராகஇருப்பிர்கள்.

2.SNOOZE பொத்தானை உபயோகிக்காதீர்கள்

முதலில் குறிப்பிட்டது போல் கடிகாரம் ஒலித்த பிறகு அதை அனைத்து விட்டு சில நிமிடங்கள் உடலும் மனதும் உறங்க துடிக்கிறது. இதில் இருந்து விடுபடுவோர் சிலரே.

நீங்கள் தூங்க செல்லும் முன் கைபேசியிலோ அல்லது கடிகாரத்திலோ எழிப்பொலியை உங்கள் படுக்கையில் இருந்து சற்று தொலைவில் வைத்துக்கொள்ளவும். அதாவது நீங்கள் மணி ஒலித்ததும் உங்கள் படுக்கையில் இருந்து எழுந்து நிறுத்த பழகுங்கள். இதுவே கைக்கு எட்டும் தொலைவில் இருந்தால் நீங்கள் எழாமலே எத்தனை முறை வேண்டுமானாலும் அணைத்து விடுவீர்கள். எனவே இந்த பழக்கம் உங்கள படுகைலயில் எழ உதவும்

3. ஒரு கட்டுப்பாட்டு தூங்குபயிற்சியை வைத்திருங்கள்.
நம் அனைவருக்கும் ஒரு வழக்கமாக தூங்கும் நேரம் கிடைப்பதில்லை. அறிவியல் ஆய்வாளர்களின் கருத்தாவது நம் உடலுக்கு ஒரு ரிதம் உள்ளது அது சரியான உறங்கும் நேரத்தை பின்பற்றுவதாகும். ஒரு முறை இதை பழகி விட்டால் இந்த பழக்கம் சில நாட்களில் இயற்கை ஆகிவிடும்.

  சரியான நேரத்தில் எழுவதால் நமது அன்றாட வேலைகள் ஆன பல் விளக்குதல், குளித்தல் போன்ற பழக்கங்கள் தினமும் சரியான நேரத்தில் முடிந்துவிடும்.


4.வழக்கமான இரவு நேர துவக்கம்
இரவு உணவு உண்டதும் சிறிது நேரம் இனிமையான பாடல்கள் அல்லது ஊக்கமூட்டும் ஒலி புத்தகங்களை கேட்க வேண்டும்.
அதை கேட்கும் பொழுதே அன்றைய நாள் பற்றிய குறிப்பை எழுதுங்கள்.இதை தினமும் பழகி கொள்க.

நாளைய பொழுதை எவ்வாறு துவக்க வேண்டும் என்ற திட்டம் இடுவதற்கு உதவும்.
இதை பின்பற்றுவதன் மூலம் நாளைய பொழுதை பற்றிய மனஅழுத்தம் குறையும்.

5.வழக்கமான காலை நேர துவக்கம்
காலை எழுந்தவுடன் பின்வருபவற்றை உங்கள் பழக்கங்களாகக்கொள்ளுங்கள்

  • எழுந்தவுடன் நீர் அருந்துங்கள். உங்கள் படுக்கையின்  அருகில் நீர் வைத்துவிட்டு உறங்குகங்கள்.
  • ஜன்னல் கதவுகளை திறந்துவிடுங்கள் வெளிச்சம்  மற்றும் தென்றல் உள்ளே வரட்டும்.
  • 5 நிமிடங்கள் இனிமையான பாடல்களை கேளுங்கள் 


முடிவுரை
இந்த பழக்கங்கள் ஆரம்பத்தில் கடினமாக இருப்பினும் சில நாட்களில் பழகி விடும். உடலும் மனதும் இதில் ஈடுபட்டுவிடும் மற்றும் புத்துணர்ச்சியும் பெறும்.

வாருங்கள் நம் வாழ்கை, நம் பழக்கங்களில்.










I Never Let Me Go...

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈...